ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.! வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு.!

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.! வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு.!

  • ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 எண்களைக் கொண்ட பான் கார்டின் ஆதார் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 30 கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17 கோடியே 58 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை. இந்த சூழலில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள்  https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்ணைகளையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ரகசிய எண்ணை (OTP) கொடுத்து ஆதார், பான் கார்டை இணைக்கலாம். பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இதனை பதிவு செய்யலாம். UIDPAN ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் பதிவு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டுவிடும். குறிப்பாக பான் கார்டு செல்லாது என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மார்ச் 31க்கு பின் எப்போது ஆதார் எண்ணை இணைக்கிறோமோ, அப்போதுதான் பான் கார்டு மீண்டும் செல்லுபடியாகும்.

Latest Posts

#சட்டநடவடிக்கை பாயும்-கூகுள் மீது பேடிஎம் பாய்ச்சல்!!!
#2வது ராக்கெட்ஏவுதளம்-குலசேகரன்பட்டினம்!பணிகள் விறுவிறு..ஜிதேந்திரசிங் தகவல்
#விடியவிடிய போராட்டம்- விடியற்காலையில் தேநீருடன் துணைத்தலைவர்!!
#IPL2020:கோலியின் கணிப்புக்கு மாறான கேட்ச்-சச்சின் சரக்
செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!
#49 இந்தியர்களை சிறைபிடித்தது பாக்...!
முட்டையில் நோயெதிர்ப்பாற்றல் அதிகம் - மஹாராஷ்டிராவில் அதிகரித்த முட்டையின் தேவை!
#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்
சிம்புவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா...?
ராணுவத்திற்கு #CAR816- துப்பாக்கிகள் தயார்!-அமீரகம் அசத்தல்