பழநி திருஆவினன்குடியில் இன்று திருக்கல்யாணம்

பழநி திருஆவினன்குடியில் இன்று திருக்கல்யாணம்

  • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி அருகே உள்ள மண்டபத்தில் முத்துகுமாரசுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
  • மேலும் இன்று இரவு வெள்ளி தேரோட்டமும் நடக்க இருக்கிறது.இந்நிலையில் நாளை மாலை கிரிவீதியில் தேரோட்டமும் நடக்க இருக்கிறது.

குழந்தை வேலாயுத சுவாமி:

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. முருகனின் பழமையான கோவில் திருஆவினன்குடி ஆகும்.

இங்கு முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இங்கு முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவரையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும்.

பங்குனி உத்திர திருவிழா:

திருஆவினன்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக பங்குனி உத்திர திருவிழா கொண்டாட பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்று வருகிறார்கள்.இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

திருக்கல்யாணம் :

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி அருகே உள்ள மண்டபத்தில் முத்துகுமாரசுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மேலும் இன்று இரவு வெள்ளி தேரோட்டமும் நடக்க இருக்கிறது.இந்நிலையில் நாளை மாலை கிரிவீதியில் தேரோட்டமும் நடக்க இருக்கிறது.

 

 

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *