பாலமேட்டில் பட்டையை கிளம்பும் ஜல்லிக்கட்டு துவங்கியது..!வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்..!!

இன்று உழவர் திருநாளையொட்டிடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு படு

By kavitha | Published: Jan 16, 2019 08:34 AM

இன்று உழவர் திருநாளையொட்டிடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு படு ஜோராக தொடங்கியுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டானது மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என்ற பெயருக்கு பெயர் போன ஒன்றாகும். Image result for jallikattu இந்நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டை அம்மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து  துவக்கினார். Image result for jallikattu இந்த ஜல்லிக்கட்டில் மருத்துவ  பரிசோதனை மூலம் தாஎர்வுச்செய்யப்பட்ட 988 காளைகள் களமிறக்கப்படுகின்றன. இதனை அடக்க 855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் உடல் தகுதி சோதனையில் 846 மாடுப்பிடி வீரர்கள் தேர்வாகி களமிறங்க உள்ளனர். Image result for jallikattu வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு டூவீலர்கள், எல்இடி டிவி, ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ, பசுங்கன்று, பாத்திரங்கள், தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டை பார்க்க உள்ளூர் வெளியூர் என ஒட்டுமொத்த மதுரையும் கூடியுள்ளதால் பாதுகாப்பு  பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  
Step2: Place in ads Display sections

unicc