PAKvsSL:பேட்டிங்கில் சொதப்பல்..! உஸ்மானின் அதிரடி பந்து வீச்சில் சரிந்த இலங்கை அணி..!

PAKvsSL:பேட்டிங்கில் சொதப்பல்..! உஸ்மானின் அதிரடி பந்து வீச்சில் சரிந்த இலங்கை அணி..!

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டி கடந்த  27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.
நேற்று இரண்டாவது போட்டி கராச்சியில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
Image

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இமாம்-உல்-ஹக் ,ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினார்.ஆட்டம்  தொடக்கத்தில்இமாம்-உல்-ஹக்  31 ரன்களில் வெளியேற பின்னர் பாபர் ஆசாம் ,  ஃபக்கர் ஜமான் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய  ஃபக்கர் ஜமான் 65 பந்தில் 1 சிக்சர் , 6 பவுண்டரி என அரை சதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார். பிறகு அதிரடியாக  விளையாடிய பாபர் ஆசாம்105 பந்தில்  115 ரன்கள் குவித்தார். Image
இதை தொடர்ந்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் அடித்தனர்.இலங்கை அணியில் வாணிந்து 2 விக்கெட்டை பறித்தார்.

306 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரராக தனுஷ்க ,
சதீரா இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே இலங்கை அணி விக்கெட்டை பறிகொடுத்தது.
Image
தனுஷ்க 14 , சதீரா 6 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்டை இழந்து 28 ரன்னிற்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது. பின்னர் மத்தியில் இறங்கிய  ஜெயசூரியா , தாசுன் இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின்  எண்ணிக்கையை உயர்த்தினர்.
Image
சிறப்பாக விளையாடி வந்த ஜெய்சூர்யா சதம் அடிக்காமல் 96 ரன்களில் வெளியேறினார். பின்னர் தாசுன் 68 ரன்களில் வெளியேற இறுதியாக இலங்கை அணி 46.5 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பந்து வீச்சில் உஸ்மான்  5 விக்கெட்டை பறித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube