பஞ்சாபில் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்..!

பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரீல் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம்

By surya | Published: Oct 08, 2019 07:30 PM

பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரீல் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று இரவு 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, ரோந்து பணிகள் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் போலீசார், உளவுத் துறையினர் மற்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், அந்த விமானங்கள் மூலம் ஆயுதக் கடத்தல் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை இந்திய எல்லையில் வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வான்வெளி மூலம் ஆயுதங்கள் கடத்துவதை தடுக்க பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc