பாகிஸ்தான் வீரர் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டிகளில் பந்து வீச தடை.!

  • பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
  • தற்போது விதிமுறைகளுக்கு மாற்றாக சட்ட விரோதமாக பந்து வீசியதால் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து போட்டியிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், 39 வயதான அவர் டெஸ்டில் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மட்டும் ஆடி வருகிறார். முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவரது பந்து வீச்சு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீசின் பந்து வீச்சு செயல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அவர் விதிமுறைகளுக்கு மாற்றாக சட்ட விரோதமாக பந்து வீசுவது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டியிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹபீசுக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2005-ம் ஆண்டு அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது பந்து வீச்சை சரி செய்தார். மேலும் இவர் 218 ஒரு நாள் போட்டி, 89 T20 மற்றும் 55 டெஸ்டில் போட்டியில் விளையாடியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்