இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.. 14 நாட்கள் தனிமை!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக

By surya | Published: Jun 29, 2020 01:35 PM

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று பாகிஸ்தான் புறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள், இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்தனர்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் சில நாடுகளில் விளையாட்டு போட்டிகளை நடந்த அனுமதியளித்துள்ளது. இதன்காரணமாக, இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் பங்கேற்க நேற்று சிறப்பு விமானம் மூலம் பாகிஸ்தான் அணி வீரர்கள் 20 பேர் உட்பட 31 பேர் புறப்பட்டனர். இதில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் புறப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் தற்பொழுது இங்கிலாந்து சென்றடைந்தனர். அந்த விடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. மேலும், இங்கிலாந்து சென்றடைந்த வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

Step2: Place in ads Display sections

unicc