உலகக்கோப்பையில் ஆறுமுறை 300 ரன்கள் மேல் குவித்து வெற்றி பெற்ற பாகிஸ்தான்

உலகக்கோப்பையில் ஆறுமுறை 300 ரன்கள் மேல் குவித்து வெற்றி பெற்ற பாகிஸ்தான்

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது.இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில்நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.இறுதியாக பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்து 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இதுவரை விளையாடிய  உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆறாவது முறையாக 300 ரன்கள் மேல் குவித்து உள்ளது. உலகக்கோப்பையில்  300 ரன்கள் மேல் அடித்த பட்டியலில் இப்போட்டியில் அடித்த ரன் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.மேலும் 300 ரன்கள் எடுத்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
349 vs Zim (2007, Win)
348 vs Eng (2019, Win)
339 vs UAE (2015, Win)
338 vs Sri (1983, Win)
330 vs Sri (1975, Win)
317 vs Ken (2011, Win)

author avatar
murugan
Join our channel google news Youtube