உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்….மொயின் கான் கருத்து…!!

ஜூன் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஜூன் 16_ஆம் தேதி மோதுகின்றன. உலகளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வகையில் இந்த போட்டிக்கும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கின்றது.

இந்நிலையில் , பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான்,   இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிகள் குறித்து பேசுகையில் , பாகிஸ்தான் அணி கட்டாயம் இந்திய அணியை தோற்கடிக்கும் . இந்தியாவுடன்  முதல் வெற்றியை உலக கோப்பை தொடரில் பதிவு செய்ய தற்போதைய அணி மிகவும் திறமையாக உள்ளது. இதற்கும் முன்பு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை  தோற்கடித்ததால் நான் இதைச் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment