தக்காளி பண்ணையை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்கள்! அண்டை நாட்டில் நிலவரம் என்ன?

நம்மூரில் தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ

By manikandan | Published: Nov 17, 2019 07:56 AM

நம்மூரில் தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், நம் நாட்டின் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி வைத்து கூடாது எனவும் பல்வேறு விதிமுறைகளை விதித்து விலைவாசியை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது இதே நிலைமை அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. அங்கு தக்காளி விலை மிகவும் அதிகமாக விலை ஏறியுள்ளது. அங்கு விளைச்சல் குறைவாலும்,  இந்தியாவுடனான வர்த்தக தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் தக்காளியின் விலை கிலோ 180 இருந்து 300 வரை விற்கப்படுகிறது. இந்த கடுமையான விலையேற்றத்தின் காரணமாக அந்நாட்டு அரசு ஈரானிலிருந்து தக்காளி இறக்குமதி செய்ய உள்ளது. மேலும், தக்காளி வைக்கப்பட்டுள்ள பண்ணைகளில் திருட்டு பயம் அதிகமாக இருப்பதால் அங்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc