ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாகிஸ்தான் புகார் !!!!

  • ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த ராணுவ தொப்பியை டோனி வழங்கினார்.
  • ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் சம்பளம்  ரூ.8 லட்சம் ஆகும்.இதே போல் களம் இரங்காமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு அதில் பாதியாக ரூ.4 லட்சம் கிடைக்கும்.
காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று முன்தினம்  நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த ராணுவ தொப்பியை டோனி வழங்கினார். .
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை  நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம்.
இதே போல நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் சம்பளம்  ரூ.8 லட்சம் ஆகும்.இதே போல் களம் இரங்காமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு அதில் பாதியாக ரூ.4 லட்சம் கிடைக்கும்.
இந்த தொகை அனைத்தும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூறியதை  ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் ராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
இது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மெஹ்மூத் குரேஷி  இந்திய அணி ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும்  கூறினார்.
author avatar
murugan

Leave a Comment