பாகிஸ்தான் வான் வழியாக செல்ல இந்திய குடியரசு தலைவருக்கு அனுமதி மறுப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் ஒரு முயற்சியாக பல்வேறு நாடுகளின் உதவியை நாடியது பாகிஸ்தான்.ஆனால் மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.ஆனால் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 9-ஆம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து மற்றும் சுவிஸ்சர்லாந்து செல்ல உள்ளார்.இதற்காக பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது .அனுமதி கோரப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு அந்நாட்டு வான்வெளியில் பறப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது என்று ஏ.எப்.பி.  செய்தி  நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.