இந்தியாவுடன் இனி வர்த்தக உறவு இல்லை – பாகிஸ்தான் அரசு முடிவு!

இந்தியாவுடன் இனி எந்தவித வர்த்தக உறவும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 நாட்காக கடும் முரண்பாடு இருந்தது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் வர்த்தக உறவு இல்லை என்று முடிவு செய்துள்ளது. மேலும் , பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்திய தூதரை உடனடியாக திரும்ப அனுப்புவதாகவும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரை நேற்றே பாகிஸ்தான் அரசு தம் நாட்டிற்கு அழைத்தது குறிப்பிடத்தக்கது.