கொரோனாவால் உலகமே தவித்து வரும் நிலையில் இலங்கைக்கு 2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய பாகிஸ்தான் பங்காளிகள்…

நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கு  போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும், கடத்தப்படுவதும்  அதிகரித்துள்ளது.  இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும்  வடக்கு பகுதியில்  போதைப்பொருள் விற்பனை அதிகம் என்றும்,  இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு  மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், தற்போது  இலங்கை வரலாற்றிலேயே  முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர்  தற்போது பறிமுதல் செய்துள்ளது. மேலும், போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை  வரலாற்றில் அதிக போதைப்பொருள் பிடிப்பட்டது பொதுமக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj