காஷ்மீர் விவகாரம்! பாகிஸ்தானை ஆதரிக்கும் 'அந்த' 58 நாடுகள் எங்கே?! வெளியுறவு துறை அமைச்சரை அதிர வைத்த கேள்வி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பிறகு பாகிஸ்தான் அரசு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிரானதான் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூட காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்த்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் உள்ளன. என அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் டிவி சேனலில் ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹதீன் கலந்துகொண்டார். அவரிடம் நெறியாளர்,  காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் உள்ளதாக பிரதமர் இம்ரான் கான் கூறிவருகிறாரே அது அந்த நாடுகள் எவை என வெளியுறவு துறை அமைச்சரிடம் கேட்டுவிட்டார்.
அமைச்சர் கடுப்பாகி, பதில் கூறாமல் இருந்தார். நெறியாளர் விடாமல், இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்த டிவிட்டர் செய்தியை காண்பித்து கேள்வி கேட்டார். ஆனால், வெளியுறவு துறை அமைச்சர் பதில் கூறாமல் தப்பித்துவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.