பல மாதங்களுக்கு பிறகு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்.. இங்கிலாந்துக்கு புறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை

By surya | Published: Jun 28, 2020 08:22 PM

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று காலை இங்கிலாந்து நாட்டிற்க்கு சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டது. அங்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டிகளில், பாக்கிஸ்தான் அணியில் கொரோனா தொற்று உறுதியான 10 வீரர்களும் இடம்பெறவில்லை.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 20 பாகிஸ்தான் வீரர்கள், லாகூர் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டனர். விமானத்தில் வீரர்கள் முகமூடி அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்து இங்கிலாந்து செல்லும் புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போட்டி நடைபெறும் முன், வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Step2: Place in ads Display sections

unicc