தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ட்வீட்!

இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்க, அதன் பின்னர் நேற்று முதல் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து நேற்று 10 மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் பல  ட்வீட்  பதிவு செய்துள்ளார். அதில், இந்தியா தான் தீவிரவாதிகள் பெயரை சொல்லி பாகிஸ்தானுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. என்றும், பயங்கரவாதிகள் ஒரு சிலர் காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும், இன்னும் சிலர் தமிழகத்திற்குள் நுழைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளதை  நாங்கள் தற்போது கேள்விப்பட்டோம்.

இந்த செயலானது இன அழிப்பு மற்றும் இனப்படுகொலையில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் செயல் ஆகும். காஷ்மீரில்  மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் இந்திய தலைமை முயற்சித்து வருகிறது என சர்வதேச சமூகத்தை எச்சரித்துக் கொள்கிறேன். என தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக பல டிவீட்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.