நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை மறித்த பாகிஸ்தான் போர் விமானங்கள்..!

டில்லியிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காபூர் நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கடந்த மாதம் 23-ம் தேதி வழக்கம் போல டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது இந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்தனர்.
ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும்.  2 பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானங்கள் நடுவழியில் மறித்து விமானத்தை தாழ்வான பகுதியில் பறக்கும் படியும் , விமானத்தை பற்றியும் விவரங்களை சொல்ல வேண்டும் என கூறினார்.
இதை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானி  இது போர் விமானம் அல்ல; பயணிகள் பயணிக்கும் விமானம் என கூறினார்.இதை தொடர்ந்து உறுதிப்படுத்த பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானம் ஆப்கானிஸ்தான் வரை இந்த விமானத்தை பின்தொடர்ந்து சென்றது.இதை மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

author avatar
murugan