லாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர் ஆன பெயின்டர்..!

இமாச்சல் பிரதேசம், உணா மாவட்டத்திலுள்ள சுருகூ பகுதியை சேர்ந்தவர், சஞ்சீவ்

By surya | Published: Nov 11, 2019 07:11 PM

இமாச்சல் பிரதேசம், உணா மாவட்டத்திலுள்ள சுருகூ பகுதியை சேர்ந்தவர், சஞ்சீவ் குமார். மிகவும் வறுமை நிலையில் வாடும் இவர் , பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்புகையில், அவர் இரண்டு தீபாவளி லாட்டரி சீட்டை வாங்கினார். சீட்டுகளை வாங்கியதும் அவர் வெற்றி பெறுவார் என அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் இந்த லாட்டரி சீட்டு முடிவுகள் கடந்த ஒன்றாம் தேதி வெளிவந்தது. இரண்டு சீட்டுகளில் ஒரு சிட்டில் 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர், அந்தப் பணத்தின் மூலம் தனது வறுமை நீங்கும் எனக் கூறினார். அது மட்டுமின்றி அவருடைய இரண்டு குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால செலவுக்காக இதனை பயன்படுத்துவோர் எனவும் கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc