டாஸ் வென்ற இலங்கை அணி ! பேட்டிங் செய்ய தேர்வு செய்தது !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். … Read more

தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும்-முதலமைச்சர் பழனிசாமி

குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன.நீராதாரங்கள் வற்றி போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இதற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நாள் … Read more

ரயில்வே பட்ஜெட்: இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு ரூ .65,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறைக்கான நிதி பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில்,கடந்த சில வருடங்களாக மொத்த பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது.இந்த பட்ஜெட்டினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார். 2019- 2020 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு 65,000 கோடி ரூபாயானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர்  பியூஸ் கோயல் ரயில்வே … Read more

பங்களாதேஷ் வீரர் ஷாகிப் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் !

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 26 போட்டியில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் இரு அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடிய … Read more

சென்னையில் நள்ளிரவில் தொடரும் திருநங்கைகளின் அட்டகாசம்! போலீசாரிடம் அத்துமீறிய இளைஞர்கள்!

சென்னையில், நுங்கம்பாக்கம் சாலையில், இரவு நேரங்களில் தினமும் அந்த சாலையில் திருநங்கைகள் உலா வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் பலமுறை திருநங்கைகளிடம் பேசியும் அவர்களின் நடமாட்டம் குறைந்த பாடில்லை. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தை சேர்ந்த  கார்த்திகேயன் என்ற போலீசார், சொகுசு காரில் வந்த 4 பேர் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்ததாக, கார்த்திகேயன் அவர்களை கிளம்பும்படி சொல்லியுள்ளனர். மதுபோதையில், இருந்த 4 இளைஞர்களும் நாங்கள் நான்கு பெரும் வக்கீல் என்று சொல்லி அங்கிருந்து … Read more

தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை யோகா பயிற்சி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது வருவதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகமா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/By9k9EohUAP/?utm_source=ig_web_copy_link

கண்ணாடி போன்ற உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஊர்வசி பிரபலமான இந்திய நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் பல ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கண்ணாடி போன்ற உடை அணிந்தவாறு உள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/By7XQ1QgMDp/?utm_source=ig_web_copy_link

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க் முதலிடம் !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடப்பு உலகக்கோப்பையில் 26 லீக் போட்டியில் நடந்து முடிந்து உள்ளது. இந்நிலையில் லீக் போட்டியில் அதிக வெற்றி பெற்று முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ,ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று புள்ளி  பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் … Read more

ரூ.5,52,73,825 கடன் பாக்கி !ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு,கல்லூரி

விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ரூ.5,52,73,825  கடன் பாக்கிக்காக விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக அறிவித்துள்ளது. அதன் படி  சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது.மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் … Read more

சர்வதேச யோகத்தினத்தை முன்னிட்டு ரசிகர்களுடன் இணைந்து, யோகாசனம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நடிகை சில்பா செட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து யோகாசனம் செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By9V1KKBe5C/?utm_source=ig_web_copy_link