பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் பெயர் சல்பேட்டா-வா?!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் பெயர் சல்பேட்டா-வா?!

கபாலி, காலா திரைப்படங்களை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்த இயக்கும் படத்தின் அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா, ‘மெட்ராஸ்’ கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். படம் முழுக்க வடசென்னையை மையமாக வைத்துதான் கதைகளம் நகரும் என கூறப்படுகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் சல்பேட்டா என்ற படத்தின் தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube