எப்ப? எப்படி?! மோட்டைத் தலைக்கு ஏன் முடிச்சு?!

சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது?மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன்? இதுவரை பதில் இல்லை?  என்று காங்கிரஸ் எம்.பி  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் ராஜீவ் அறக்கட்டளை விவகாரம்  குறித்தும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது.இதில் என்ன தவறு? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழுங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது. சீன  ஆக்கிரமிப்பை எப்படி,எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இது வரை பதிலில்லை என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

அன்மையில் தான் பாஜக ,கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் அளித்த நிதியுதவி குறித்து குற்றம் சாட்டியதுடம்,சீன நிதியில் தான் அறக்கட்டளை செயல்படுகிறதா?என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பிய நிலையில் காங்.,எம்.பி பா.சிதம்பரத்தின் தற்போது பதிவிட்டப்பட்ட ட்விட் பரபரப்பாகி உள்ளது.

author avatar
kavitha