8 நாட்களே மீதமுள்ள நிலையில் இன்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு!

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார்

By manikandan | Published: Sep 11, 2019 01:32 PM

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் சிபிஐ விசாரணையில் உள்ளார். அவர் கடந்த 5ம் தேதி முதல் திகார் சிறையில் விசாரணைக் உட்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் 8 நாட்கள் அவர் திகார் சிறையில் இருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக டெல்லி உயர் நீதிமன்றம் தொடர் அரசு விடுமுறை என்பதால் இன்று அந்த ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் ப.சிதம்பரம் தரப்பில், 'தான் சிபிஐ அழைத்த  அனைத்து விசாரணைக்கும் முறையாக ஆஜராகி உள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். மேலும், பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு வழக்காக தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, தற்போது இந்த விசாரணை நடத்தபடுவது உள்நோக்கம் கொண்டது.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் வழக்கு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc