உதயநிதியின் 'சைக்கோ' படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவே இல்லை! பி.சி.ஸ்ரீராம் அதிரடி ட்வீட்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படமெடுத்து திறமையான இயக்குனராக இருக்கிறார்

By manikandan | Published: Sep 11, 2019 08:45 AM

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படமெடுத்து திறமையான இயக்குனராக இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து சைக்கோ எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.   இந்த படத்தில் அதிதி ராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் தான் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது உதவியாளரான தன்வீர் என்ற காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளாராம். 99 சதவீத படப்பிடிப்பில் அவர்தான் இருந்தாராம். ஆதலால் படத்தின் பெயர் பலகையில் அவரது பெயரை போட்டுக்கொள்ளுமாறு படக்குழுவிற்கு டிவிட்டரில் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.
Step2: Place in ads Display sections

unicc