கடும் பனியால் 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து.!

  • அமெரிக்காவில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது
  • விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.

அமெரிக்காவில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், அந்த வழியாக செல்லும் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின விபத்து ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனினும் அதிர்‌‌ஷ்டவசமாக இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கார்களுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்கபட்டனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர், பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய கார்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு. பின்னர் நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்