இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், கேளாய் எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தொழில் துறைகளும் சரிவை கண்டுள்ளது. 

இதனால், பல தொழில்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாஸ்காம் என்ற நிறுவனம் எடுத்த ஆய்வு ஒன்றில், இந்தியாவில் தொழிநுட்பதுறையில் இதுவரை 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதில், 62% பேருக்கு 40% ஊதியமும், 34% பேருக்கு 80% ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.