அய்யயோ.. கோவிலை காணோம்! வடிவேலு காமெடி போல நடந்த சம்பவம்..!

  • சென்னை, தாம்பரம் அருகே, மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில்

By Fahad | Published: Apr 08 2020 08:34 AM

  • சென்னை, தாம்பரம் அருகே, மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் ஒரு பழைமையான விநாயகர் கோவில் உள்ளது
  • காலை கோவிலுக்கு வந்தவர்கள் கோவிலை காணவில்லை என காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.
சென்னை, தாம்பரம் அருகே உள்ள மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் ஒரு பழைமையான விநாயகர் கோவில் உள்ளது. இதில் அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். மேலும் கோவிலுக்கு பின்னே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பூச்சி மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனத்தை கட்டி வந்தனர். இதனால் அவர்களுக்கு அந்த கோவில் இடையூறாக இருப்பதால், அதனை இடிக்க போவதாக கூறி வந்தார்கள். இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில், வழக்கம் போல் அங்கு சாமிக்கும்பிட வந்த மக்கள், கோவில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சோலையூர் காவல் நிலையத்தில் அவர்கள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை வைத்து பார்க்கையில், அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கோவிலை இடித்தாக தெரியவந்தது. மேலும், அதில் இருந்த பொருட்களை லாரியில் எடுத்து சென்றதாக தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Posts