நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார் : நடிகர் அஜய் தேவ்கன்

நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல படங்களில் வில்லனாக

By leena | Published: Oct 16, 2019 01:14 PM

நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரின் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, பிரதமர் மோடி கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோடி கடற்கரையில் குப்பைகளை தானே அகற்றினார். இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனும் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை பாராட்டி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார். தனது கையாலேயே மாமல்லபுரக் கடற்கரையில் இருந்த குப்பைகளை மோடி அகற்றியது உத்வேகத்தை அளிக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டிய பொறுப்பு நம்மக்கு இருப்பதை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.' என்று பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc