நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5,000,000,000,000 ட்ரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு -மோடி

இன்று 73 வது சுதந்திர தினத்தை நாம் நாடுமுழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி அப்பொழுது அவர் பேசுகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மாற்று  35ஏ ,முத்தலாக் ,விவசாயிகளுக்கான வருங்கால திட்டங்கள் பற்றி பேசினார் .

அப்பொழுது அவர் பொருளாதார வளர்ச்சியை பற்றி மேற்கொள்காட்டி பேசினார் . அவர் கூறுகையில் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5டிரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு .2014-2019 ஆண்டுகளில் நாங்கள் 3 ட்ரில்லியனாக உயர்த்தியுள்ளோம் .கடந்த 70 ஆண்டுகளில் 2 ட்ரில்லியனாக இருந்த பொருளாதார வளர்ச்சியை நாங்கள் 5 ஆண்டுகளில்  2 இல் இருந்து 3 ஆக உயர்த்தியுள்ளோம் .வரும் காலத்தில் 5 ட்ரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு எனவும் காஷ்மீர் யூனியன் பிரேதேசமாக பிரித்ததை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என தெரிவித்தார் .

author avatar
Dinasuvadu desk