திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு-உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு-உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் இளைஞர் அணி கான புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக இளைஞர் அணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே எங்களின் இலக்கு. ஆனால் அதனை விட அதிகமான உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்ப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விரைவில் ஒரு ஆட்சி மாற்றம் வரும் அதற்கு முழு முதற்காரணமாக இந்த ஆயிரம் விளக்கு தொகுதி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube