சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் துணைவேந்தர்கள் ஆளுநரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் அண்ணா பெயரை மாற்றினால் பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிடும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கேள்வி குறியாகும்.

இதையடுத்து மாணவர்களின் சான்றிதழ் செல்லாமல் போவதுடன் ஐ.ஒ.இ. அந்தஸ்தும் கைநழுவிச்செல்லும். எம்ஜிஆரால் துவங்கப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை வாய்ந்தது. இது பல்வேறு சிறப்புகளை கொண்டது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். பெயரை மாற்றக்கூடாது என அரசுக்கு வலியுறுத்தி மசோதாவில் திருத்தும் செய்ய உத்தரவிட வேண்டும்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசியர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த செயற்குழு கூட்டத்தில் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சட்டபேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்
ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி
#IPL2020 : கெய்க்வாட் அரைசதம் ! கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!
டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!