நடிகர் சிம்புவின் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது !!!

நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில்  சிறந்த நடிகராக வலம் வருகிறார். சிறு வயதிலிருந்து நடிப்பதில் ஆர்வம் செலுத்தி அதில் வெற்றி கண்டவர். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடல் ,நடனத்திலும் புகழ் பெற்றவர்.

இந்நிலையில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’  படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘ வந்தா ராஜாவா தான் வருவேன் ‘ படத்தில் ‘ரெட் கார்டு’ என்ற பாடலை  நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த பாடல் வெளியாகி  மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் இன்னொரு பாடல்  ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில் உருவாகியுள்ள ‘வாங்க மச்சான் வாங்க’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment