வைகோ வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு ! திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல்

Opportunity to reject Vaiko nomination! NR Sri Lanka nomination filed on behalf of DMK

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில்  விசாரித்த நீதிபதி சாந்தி  வைகோ குற்றவாளி என கூறி  ஒரு வருடம் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் .வைகோ மனு நாளை நிராகரிக்கப்பட்டால் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிட வாய்ப்பு உள்ளது .எனவே இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.