கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்பு-அமலாக்கத்துறை..!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.பிறகு சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை திகார் சிறையிலேயே சிதம்பரத்தை கைது செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ப. சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து ப. சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரிமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்த வழக்கறிஞர் ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ வழக்கில்தான் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் பெற்று உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

author avatar
murugan