ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த விற்பனை காட்டும் ஓப்போ...அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை... சகல வசதிகளுடன் சந்தையில் இறங்கப்போகிறது...

Oppo unveils best selling in the smartphone market with its new model ...

ஸ்மார்ட் போன் விற்பனையில் மாஸ் காட்டும் ஒப்போ நிறுவனம் தற்போது  ரெனோ 3 ப்ரோ என்ற புதிய மாடல்  ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் மாதம்  2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒப்போ தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னதாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதள பக்கங்களில் வெளியானது. இது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் டீசரில் புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன்
44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்பது  தற்போது உறுதியாகி உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில்
  • 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே,
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,
  • 8 ஜி.பி. ரேம்,
  • 128 ஜி.பி. மெமரி,
  • 12 ஜி.பி. ரேம்,
  • 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
  • மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒ.எஸ். 7 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இத்துடன் 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 48 எம்.பி.
  • பிரைமரி கேமரா, 13 எம்.பி. சென்சார், 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.