இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Opening of Sabarimala Iyyappan Temple Walk today

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக இன்று மாலை 5:30 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. இது தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதையடுத்து நாளை முதல் 18 தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல பூஜைகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து 18-ம் தேதி இரவு 10:30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The Sabarimalai Iyyappan Kovil in Thiruvananthapuram, Kerala, will be opened at 5:30 pm today. It is in the presence of Tandri Kandaru Mahesh Mohanaru, the superintendent Sudheer Namboodiri opens the stage and conducts the Deeparadhana. The walk will open at 4 am tomorrow. Temple shrine is open daily at 4 am and many pujas are performed. On the 18th, at 10:30 pm, the Hariivarasana song is performed at the Athala Pooja and the temple is closed. Special buses are operated on behalf of the Kerala Transport Corporation for the convenience of devotees.