புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு – அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில அரசுகளே சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று அம்மாநில கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்க வரக்கூடாது என்று கூறியுள்ளார். மதுபானம் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றி வாங்கி சேலை வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்