ஜப்பானில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள்!

ஜப்பானில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள்.

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகள் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயினால் இதுவரை உலக அளவில், 3,308,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 234,108பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குறைந்த அளவு கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிப்பதற்காக 2 ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல்களில் செவிலியர்களுக்கு பதிலாக, 2 ரோபோக்கள் நோயாளிகளுக்கு பணி செய்கின்றன.

இதில் பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள ரோபோ, நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டலுக்கு வருகை தந்த டோக்கியோ ஆளுநர், யுரிக்கோ கொய்க்கியை இந்த பேப்பர் ரோபோ வரவேற்றுள்ளது.

மேலும்,  செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்டுள்ள மற்றோரு ரோபோ, கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று, கிருமினாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உடல் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.