எல்லாம் ஓகே ..ஆனா இன்னும் ஒரே ஒரு வீரர் மட்டும் தேவை- விராட் கோலி பேட்டி

  • உலக கோப்பை டி-20 போட்டி 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
  • வேகப்பந்து வீச்சிற்கு இன்னும் ஒரு வீரர் மட்டும் தேவைப்படுகிறார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.  

7 வது உலக கோப்பை டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் தொடங்கும் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்காக உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி டி-20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இந்திய அணியை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சு சமீப காலமாக எதிர் அணிகளை மிரட்டி வருகின்றது.சமீபத்திய தொடர்களை எடுத்துக்கொண்டால் வேகப்பந்து வீச்சாளர்களே ஜொலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக்கோப்பை போட்டிக்கு தயாராகும் நிலையில் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் 3 டி -20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இன்று இரு அணிகளுக்குமான முதலாவது டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இதனையொட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.வேகப்பந்து வீச்சில் 3 வீரர்கள் நிலையாக உள்ள நிலையில் இன்னும் ஒரு வீரர் மட்டும் தேவைப்படுகிறார்.அந்த இடத்தை பிடிக்க மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா நிலையான பந்து வீச்சாளர்கள் ஆவார்கள்.தீபக் சாகரும் தன்னுடைய பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.சமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.இவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக இருக்கும்.மேலும் புதிய பந்துகளில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.இந்திய அணியின் தற்போது  வலுவான நிலையில் உள்ளது. இளம் வீரர்களுக்கு தொடர்ந்து  வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.