தாய்மை அடைந்த தாய்மார்களால் மட்டுமே தாய்ப்பால் பற்றி குரல் கொடுக்க முடியும்!

தாய்மை அடைந்த தாய்மார்களால் மட்டுமே தாய்ப்பால் பற்றி குரல் கொடுக்க முடியும்!

பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று, தாய்ப்பால். ஆனால், இன்று பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காமல் இறந்து விடும்  அவல நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும் 76 நாடுகளில் 56- வது இடத்தில் இந்தியா உள்ளது. இதனையடுத்து, தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முழுவதும், தாய்ப்பால்  கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாய்ப்பாலின் அவசியத்தை பற்றி மற்றோரு தாயால் மட்டுமே கூற முடியும். இந்நிலையில் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என கவலைப்படும் ஐஸ்வர்யா என்ற தாயின் சோகமான கதையை பற்றி பார்ப்போம்.

சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், பேஸ்புக்கில் அம்மாக்களுக்கான ‘தி மாமி சீரிஸ்’ என்ற பேஸ்புக் பக்கம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த பேஸ்புக் பக்கம் வெறும் பேஸ்புக் பக்கம் அல்ல. தாய்மார்கள் தைரியத்துடனும், நேர்மறை எண்ணத்துடனும் வாழ வழி வகுக்கிறது.

இந்த பேஸ்புக் பக்கத்தில் ஒவ்வொரு அம்மாக்களும் தங்களது வலிகள் நிறைந்த சோகத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த பேஸ்புக் பக்கத்தில் தாய்மார்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல கேள்விகள் கேட்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜூலை மாதம் முதலே தாய்ப்பால் வாரம் என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இதற்க்கு 40 நாடுளிலிருந்து பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சாரத்தின் மூலம், தாய்ப்பால்தானம், பொது வெளியில் தாய்ப்பாலூட்டுதல் என தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பல தாய்மார் வெளியிடங்களில் பால் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் உடலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளனர். ஐஸ்வர்யா தாய்ப்பால் குறித்து இவளவு ஆழமாக வலியுறுத்துவதற்கான காரணம் என்னவென்றால், அவரது குழந்தை பிறக்கும் போது, இவர் 6 மாதமாக உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதால், அவரது குழந்தைக்கு பால் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலை குடுவையில் சேகரித்து கொடுப்பது தான் வழக்கம்.

தற்போது என்னதான் அவர் ஆரோக்கியமாக இருந்தாலும், அவளுக்கு பால் கொடுத்திருந்தால் மேலும் வலிமையாக இருப்பார் என எண்ணுகிறார். இதனால் அனுதினமும் அவரது மகளிடம் மன்னிப்பு கேட்பதுண்டு. என்றாவது ஒரு நாள் அவள் வளர்ந்த பிறகு என்னை மன்னிப்பாள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube