அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும்-தினகரன்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும்

By venu | Published: Jul 12, 2019 08:36 AM

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில்  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன்  கூறுகையில் ,  வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,  அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் .தற்போது கட்சி பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc