மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை ! ஒரு கிலோ என்ன விலை ?

சென்னை கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்காய விலை திடீரென்று உயர்ந்தது.இதனை தொடர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக வெங்காய விலை குறைந்தது.இந்த நிலையில் மழை கடந்த சில தினங்களாக நீடித்து வரும் நிலையில் வரத்து குறைவு காரணமாக தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.ஒரு கிலோ ரூ. 40-லிருந்து ரூ.50-க்கு விற்கப்பட்ட  பெரிய வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80 -ஆக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் ரூ. 50-லிருந்து ரூ.60-க்கு விற்கப்பட்ட  சின்ன வெங்காயத்தின் விலை ரூ.90  ஆக உயர்ந்துள்ளது.