கடும் விலையேற்றம் எதிரொலி! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாக உள்ள 1000 டன் வெங்காயம்!

இந்தியாவில் வெங்காயத்தின் கடுமையான தட்டுப்பாடின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துளளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெங்காயம் சென்னையில் 100 ஐ தொட்டுவிட்டது. இதனால், அரசு வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெங்காயத்தை இருப்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அரசு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் வெங்காயத்தின் விலை கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது.
வெங்காயம் அதிகம் விளையும் காரீஃப்  பக்தியில் ஏற்பட்ட கடும் வறட்சி  காரணமாக அங்கு விளைச்சல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இந்த காரணங்களால் தற்போது அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 1000 டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாம். மேலும், இதற்கான இறக்குமதி விதிகளையும் அரசு வெகுவாக தளர்த்தியுள்ளதாம். இந்த நடவடிக்கைகளின் காரணமாக வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.