ஏறுமுகத்தை நோக்கி வெங்காய விலை..! 2 மாத காலத்திற்கு குறை வாய்ப்பே இல்லையாம்..! காரணம் இது தான்

  • வெங்காயத்தின் விலை பிப்ரவரி மாதம் வரை குறைய போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்தியாவில் வெங்காயத்தின் இறக்குமதி குறையவும் வாய்ப்புள்ளதாகவும் மற்றும் விலை உயரக் கூடும்

 

இந்தியாவில் வெங்காயத்தின் சாகுபடி குறைந்ததன் விளைவாக பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது சாமானியர் வெங்காயத்தை வாங்க யோசிக்கும் அளவிற்கு விலை ஏறியுள்ளது.

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பே கிடையாது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏன் விலை குறையாது மேலும் எதற்கு இறக்குமதி குறையும் என்றால் இந்தியா வெங்காயங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் துருக்கியும் ஒன்று

தற்போது துருக்கி தனது நாட்டில் இருந்து வெங்காயத்தினை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உள்ளது.இதனால் இந்தியா வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது குறைகிறது.துருக்கி மட்டுமல்லாமல்  இலங்கை போன்ற நாடுகளும் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்து விட்ட நிலையில் இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி குறையும். இதனால் 2 மாத கால அளவிற்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை மேலும் இறக்குமதியில் குறையும் சூழ்நிலை உருவாக கூடும் இதனை தவிர்க்க உள்நாட்டில் வெங்காய சாகுபடி அதிகரித்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
kavitha