“என் தலையெழுத்தை தற்போது வெங்காயம் மாற்றிவிட்டது”-கோடீஸ்வரரான விவசாயி.!

  • கர்நாடக  மாநிலத்தில் விவசாயி ஒருவர் 20 ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்து உள்ளார்.20 ஏக்கரில் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து உள்ளார்.
  • 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் . ஆனால்அதை விட அதிகமாக வந்து வருமானம் வந்து உள்ளது.

கர்நாடக  மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டோட்டா சித்தவ்வனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மல்லிகார்ஜூனா. இவர் 20 ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்து உள்ளார். அதில் 10 ஏக்கர் நிலம்தான் அவருக்குச் சொந்தமானது. மீதி உள்ள 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வாங்கி பயிர் செய்து உள்ளார்.

இந்த 20 ஏக்கர் நிலத்தில் வேலை செய்ய 50 பேரை வேலைக்கு வைத்து உள்ளார்.மேலும்அதிக  கடன் வாங்கி தான் வெங்காயத்தை  துணிச்சலாக பயிர் செய்து உள்ளார்.  விளைச்சல் சரியாக இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது விலை குறைந்து இருந்தாலோ இவருக்கு  மிகப்பெரிய நஷ்டம் அடைந்து இருந்திருப்பார்.

ஆனால் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியதால் விவசாயி மல்லிகார்ஜூனா தற்போது கோடீஸ்வரனாக மாறி உள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் , 2004-ம் ஆண்டு முதல் மழைக்காலத்தில் வெங்காய சாகுபடி செய்துவருகிறேன். “என் தலையெழுத்தை தற்போது வெங்காயம் மாற்றிவிட்டது” என மல்லிகார்ஜூனா.

நான் பயிர் செய்த 20 ஏக்கரில் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து இருக்கிறேன். சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை விற்றது. 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய தான் விவசாயம் செய்தேன்.எனக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால்அதை விட அதிகமாக வந்து வருமானம் வந்து உள்ளது.

தற்போது கடன் எல்லாம் அடைத்துவிட்டேன். ஒரு வீடு கட்டலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். வருங்காலத்தில் இன்னும் நிலம் வாங்கி விவசாயத்தை அதிகப்படுத்த விரும்புகிறேன்” என மல்லிகார்ஜூனா கூறினார்.

இங்கே தண்ணீருக்குப் பற்றாக்குறைதான். நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டும். இதனால் பல விவசாயிகள் விவசாயத்தையே விட்டுவிட்டனர். திருடர்களிடமிருந்து வெங்காயத்தைக் காப்பாற்ற தங்கள் குடும்பத்தினர் ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருந்ததாகவும் கூறினார்.

author avatar
murugan