80 ருபாய் வெங்காயத்தை 8 ரூபாய்க்கு விற்றுவிட்டு கண்ணீர் வடிக்கும் விவசாயி!

தற்போது இந்தியாவில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் யாரும் வெங்காய இருப்பு வைத்திருக்க கூடாது. என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெங்காயத்தின் விலை 80-ஐ தாண்டுகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள ஒரு விவசாயி தான் விளைவித்த வெங்காயத்தை கிலோ 8 ருபாய் வீதம் விற்றுவிட்டார். விற்றுவிட்டு குளிர், மழை என பார்க்காமல் கஷ்டப்பட்டு விளைவித்த வெங்காயத்தை இப்படி குறைந்து விலையில் விற்றுவிட்டேன். கஷ்டப்பட்டு வேலைபார்த்த வேலைஆட்கள், வீட்டிற்கு என செய்ய போகிறோம். என தேம்பி அழ ஆரம்பித்தார். மேலும், இந்த அரசுக்கு விவசாயிகளின் கவலை பற்றி தெரியப்போவதில்லை என கண்ணீர்மல்க பேசியுள்ளார் இதனை ஒருவர் வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.