ஐ போனை தொடர்ந்து தனது பட்ஜெட் போனை வெளியிட்ட ஒன்பிளஸ்.. விலை மற்றும் முழு விபரங்கள் இதோ!

தொடர்ச்சியாக ஹை பட்ஜெட்டில் டாப்பு டக்கர் போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், தற்பொழுது தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான ஒன்பிளஸ் நார்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும், அந்த மொபைல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது பட்ஜெட் ஸ்மார்ட் போனை வெளியிடப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. மேலும், ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியையும் சொன்னது. அது, தற்பொழுது வரவுள்ள ஒன்பிளஸ் போன், ரூ.25,000 முதல் 30,000 வரை விலை இருக்கும் என்பதே.

இதன்காரணமாக, ஒன்ப்ளஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி துள்ளி வந்தனர். மேலும், அந்த ஸ்மார்ட் போன், “நார்டு” என்ற பெயரில் ஒன்ப்ளஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த மொபைல், அமேசானில் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவித்தது.

ஒன்பிளஸ் நார்டு விபரங்கள்:

டிஸ்பிலே:

ஒன்பிளஸ் 8, ஆண்ட்ராய்டு 10 os-ல் இயங்குகிறது. இந்த மொபைலில் 6.44 அங்குல FHD + Fluid AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz ரெபிரேசிங் ரேட் கொண்டுள்ளது. மேலும், அதன் கிளாஸை பாதுகாக்க கார்னரிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சத்தை கொண்டுள்ளது.

கேமரா:

ஒன்பிளஸ் நார்டு, பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் உள்ளது. மேலும், 2 எல்.இ.டி பிளாஷ், 8 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. மேலும், செல்பி கேமராவை பொறுத்தளவில், 32 மெகாபிக்சல் டூயல் புன்க்சுவல் கேமராவை கொண்டுள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ் 616 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 மெகாபிக்சல் வைட் லென்ஸ் கொண்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில், 4,115mAh பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய, 30T பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. மேலும், அந்த சார்ஜர், மொபைல் பாஸுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

இதர அம்சங்கள்:

ஒன்பிளஸ் 8, ஸ்னாப்டிராகன் 765 ஜி அட்ரினோ ப்ராஸசரை கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட், பேஸ்லாக், 5G, 4G LTE, வைஃபை 6, புளூடூத் v5.1, என்.ஏப்.சி ஜிபிஎஸ், என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள், டூயல் சிம் சப்போர்ட் ஆகியவை உள்ளன. மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

ரேம் மற்றும் விலை:

பிளாக் மற்றும் ப்ளூ கலரில் வரும் இந்த நார்டு மொபைல், வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. ஆனால், இதன் முன்பதிவு தொடங்கியது. மேலும், ஜியோ இதற்க்கு ரூ.6000 வரையிலான கேஸ் பேக் சலுகையை வழங்குகிறது.

ஒன்ப்ளஸ் நார்டு 6+64 = ரூ.24,999
ஒன்ப்ளஸ் நார்டு 8+128= ரூ.27,999
ஒன்ப்ளஸ் நார்டு 12+256= ரூ.29,999 க்கு விற்பனைக்கு வரவுள்ளது.