ரூ.12,999-க்கு “ஒன்பிளஸ்” ஆண்ட்ராய்டு டிவி! இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ!

ஸ்மார்ட்போனில் பட்டய கிளப்பும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு  முன்பாக தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மொபைல்களை வெளியிட்டது. இந்த மொபைல், இஅனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும் இதனைதொடர்ந்து, தனது அடுத்த போனான ஒன்பிளஸ் Z-ஐ இந்த மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் ஸ்மார்ட்போனில் அசத்தி வரும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஒன்பிளஸ் டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, நேற்று ஒன்பிளஸ் டிவி யூ1 மற்றும் ஒய்1 ஆகிய சீரியஸின் கீழ், மொத்தம் 3 ஸ்மார்ட் டிவி அதுவும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் டிவி ஒய்1 சிரியசில், இரண்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் 43-இன்ச் புல் எச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மற்றும் 32-இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி.

அதன் சிறப்பம்சங்கள்:

டிஸ்பிலே:

இந்த ஒன்பிளஸ் டிவி ஒய்1 சிரியஸ் ஸ்மார்ட் டிவியில் 32 இன்ச் 1366×768 பிக்சல் / 43 இன்ச் 1920×1080 பிக்சல் எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. அதில் 93% கலர் கமுட் உள்ளது. இதன்மூலம் அதிக தெளிவாக படங்களை பார்க்க முடியும்.

இந்த டிவியில் காமா என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி, 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரி மற்றும் 64-பிட் பிராசஸரூம் உள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற ஸ்மார்ட் டிவியை போலவே, இதிலும் வைபை, ப்ளூடூத் வசதி உள்ளது.

சாப்ட்வேர்:

ஒன்பிளஸ் ஒய்1 சிரியஸ் ஸ்மார்ட் டிவியில் சமீப வெர்சனான ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஓஎஸ் ஆன ஆக்சிஜன் பிளேயும் வருகிறது. மேலும், இதில் நெட்பிளிஸ் மற்றும் ப்ரைம் விடியோவுக்கான பட்டன், ரெமோடிலே வருகிறது, அதுமட்டுமின்றி, இந்த டிவியில் கூகுள் அசிஸ்டண்ட் இன்-பில்ட் ஆக வருகிறது.

OnePlus TV 55 Q1 Pro Review: A Cut Above the Rest of Android TVs

இணைப்புகள்:

இந்த ஒன்பிளஸ் டிவி ஒய்1 சிரியஸ் ஸ்மார்ட் டிவியில் வைபை, ப்ளூடூத் 5, 2x ஹெச்டிஎம்ஐ, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட் போன்றவற்றிற்கான போர்டுகள் வழங்கப்படுகிறது.

சவுண்ட்:

இந்த டிவியில் டால்பி ஆடியோ வசதியுடன் 20 வாட் ஸ்பீக்கர் உபயோகிக்கப்படுகிறது. இதன்மூல நல்ல ஆடியோ குவாலிட்டி கிடைக்கிறது. மேலும், எந்தொரு இடத்திலும் நோய்ஸ் கேன்சலேஷன் இல்லை.

விலை: 

ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச்: ரூ. 12,999

ஒன்பிளஸ் டிவி வை1 43 இன்ச்: ரூ. 22,999

இதற்க்கடுத்த மாடலான ஒன்பிளஸ் யு1 55 இன்ச்: ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த டிவிகான சேல், அமேசான் வலைத்தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.