மீண்டும் ஒரு ஆணவக்கொலையா?! உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்!

தனது சமூகத்தை சேர்ந்த பெண்ணை வேற்று சமூக ஆண் காதலித்ததற்காக, உத்திரபிரதேச

By manikandan | Published: Sep 17, 2019 06:00 PM

தனது சமூகத்தை சேர்ந்த பெண்ணை வேற்று சமூக ஆண் காதலித்ததற்காக, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்டோய் மாவட்டத்தில் மோனு எனும் இளைஞனை ஒரு கும்பல் எரித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் உள்ள ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்த பாதேசா எனும் பகுதியினை சேர்ந்த மோனு என்கிற 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், அதே பகுதியை சேர்ந்த வேறு பெண்ணை விரும்பியதாக தெரிகிறது. இந்த பெண்ணை பார்க்க வரும்போது ஒரு கும்பல் அவரை பிடித்து தாக்கி ஒரு வீட்டினுள் புகுத்தி விட்டது. பின்னர் அந்த வீட்டோடு வைத்து எரித்துவிட்டனர். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, அந்த இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் இறந்துவிட்டார். இந்த கொலை தொடர்பாக அப்பெண்ணின் வீட்டாரை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இளைஞர் பட்டியலினத்தவரை சேர்ந்தவர் என்பவர் என்பதால் ஆணவ படுகொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.,
Step2: Place in ads Display sections

unicc