மார்ச் 24-ஆம் தேதி!சீர்காழி கோவிந்தராஜன் நினைவு நாள்

மார்ச் 24-ஆம் தேதி!சீர்காழி கோவிந்தராஜன் நினைவு நாள்

மார்ச் 24, 1988 – இன்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவு நாள் ஆகும். இவர் புகழ்பெற்ற தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

பிறப்பிடம்: சீர்காழி. ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி. சிறுவனாக இருந்தபோதே பக்திப் பாடல்களை அனைவரும் பாராட்டும் வண்ணம் பாடினாலும் சென்னை இசைக்கல்லூரியில் சேர்ந்து முறைப்படியான இசை பயின்றார்.
ஏழிசை மன்னர் என்று புகழப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன்மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *